மத்திய பிரதேச முதல்வா்பொறுப்பில் இருந்து கமல்நாத் ராஜினாமா செய்தார்

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கவர்னருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,  மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய முதல் மந்திரி கமல்நாத், நண்பகலில் போபாலில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கமல்நாத் கூறுகையில், மாநிலத்தை முன்னேற்ற பா.ஜ.,வுக்கு 15 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது பா.ஜ., செய்யாததை, நான் 15 மாதங்களில் செய்துள்ளேன். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் உழைத்தோம். 2018 ல் மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பு வழங்கினார். மக்கள் அளித்த தீர்ப்பிற்கு பா.ஜ., துரோகம் செய்கிறது. ஆரம்பம் முதலே, எங்களது அரசை முடக்க பா.ஜ., முயற்சி செய்தது. எங்கள் ஆட்சிக்கு எதிராக சதி செய்து, எங்களது 22 எம்.எல்.ஏ.,க்களை கர்நாடகாவில் பிடித்து வைத்துள்ளது.

எனது நம்பிக்கையை ஜோதிராதித்யா சிந்தியா தகர்த்துவிட்டார். நாங்கள் செய்த பணிகளை பா.ஜ.,வால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனது அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இல்லை எனக் கூறிய அவர்,முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா  செய்வதாக அறிவித்தார்


" alt="" aria-hidden="true" />